You may missed !

Interesting update on Mahesh Babu and Puri flick!!!

Puri Jagannadh surprised everyone recently by revealing on his Twitter page that he will be teaming up with Mahesh Babu once again for a film that has Full Story Here


Singam 3 shooting updates!!!

Suriya and Anushka starrer Singam 3 has been progressing at a brisk pace. The film has already completed a few schedules and inside sources reveal tha Full Story Here


Neha With Parents!

Neha Dupia is a great famous actress in Bollywood but present she is not appearing in flicks and also she got Female Miss India 2002 and done her last Full Story Here


It's Time For Wake Up Rann!

'It's time for wake up Rann'- these words are by Neha Dupia. She spoke these words just after reached Bhutan- when Rann Vijay Singh is still in sleep Full Story Here


Wow... What A Devil Appearance

SowkarPettai is getting more attention from audience day by day. The posters releasing by the team are more than words and now SowkarPettai became tal Full Story Here


சாட்டை - 2... இந்த முறை சமுத்திரகனிக்கு பதில் கிஷோர்!!!

18-05-2016

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பதற்கு உண்மையான தொடர்ச்சியுடன் வெளிவந்த படம் சிங்கம் 2 மட்டும்தான். இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொண்டு வந்த எந்தப் படமும் அப்படி ஒரு தொடர்ச்சியுடன் வெளிவந்ததில்லை. இப்போது சாட்டை படத்துக்கு ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்களாம். இந்தப் படமாவது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? தெரியவில்லை. சாட்டையைத் தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். தற்போது பரத் - நமீதா நடிப்பில் வடிவுடையான் இயக்கத்தில், அம்ரீஷ் இசையில் 'பொட்டு' படத்தைத் தயாரித்து வருகிறார்கள். 'சாட்டை - 2' படத்தில் கிஷோர் மற்றும் தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த கெளதம் இந்த படத்தை இயக்குகிறார். சாட்டையில் சமுத்திரகனி நல்ல ஆசிரியராக நடித்திருந்தார். க்ளைமாக்ஸில் அவர் வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்வார். அவருக்கு பதில் அந்த வேடத்தில் இப்போது கிஷோர் நடிக்கிறாராம்.

கார்த்திக் சுப்புராஜுவுடன் ஹாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்கிறார் தனுஷ் ??

18-05-2016

இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது படம் வெளிவந்தால் மட்டுமே தெரியவரும்.

டாக்டராக மீண்டும் கலக்கவரும் வடிவேலு!!!

18-05-2016

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால் திருடனாகவும் ஜகபதி பாபு வருமான வரித்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். தமன்னா இப்படத்தில் ஜகபதி பாபு மகளாக நடிக்கவுள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடியனாக இப்படத்தில் கலக்கவரும் வடிவேலு, இதில் டாக்டராக படம் முழுக்க வரும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.

மீண்டும் அனுஷ்காவுடன் இணையும் அஜித்!!!

18-05-2016

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் இரு நாயகிகள். அதில் ஒருவர் அனுஷ்கா என தகவல்கள் கூறுகின்றன. அனுஷ்காவுடன் இது குறித்து தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அஜித் படத்திற்கு தேவைப்படும் நாளில் கால்ஷீட் இருந்தால் அனுஷ்கா நிச்சயம் நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை அனுஷ்கா நடிப்பது இறுதி செய்யப்படவில்லை.இதற்கு முன் கௌதம் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் அனுஷ்கா நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி.

மூன்றாவது முறையாக இணையும் ஜோடி!!!

18-05-2016

சமீபத்தில் வந்த படங்களில் விவகாரமான படம் என்றால் அது, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம்தான். அந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு நடிப்பில் ஏஏஏ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பின் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்கள். தனது முதல் பட நாயகன் ஜீ.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற படநிறுவனம் இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கிறது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போல இதுவும் விடலைக் காதலை மையப்படுத்தியது என்கிறார்கள்.


ஜோதிகா-நயன்தாரா வேடத்தில் அனுஷ்கா-ஹன்சிகா..!!!!

18-05-2016

ரஜினிகாந்த்-பி.வாசு-பிரபு கூட்டணியில் உருவான படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகளை இப்படம் படைத்தது. இதில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.இந்நிலையில் இதன் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகா, நயன்தாரா வேடத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் ஹன்சிகாவை அணுகவுள்ளதாக கூறப்படுகிறது. கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. ஓரே நேரத்தில் இரண்டு விருந்து!!!

இந்த படத்தின் 40 நாள் வசூலை கேட்டால் தலை சுற்றும் - விஜய், அஜித்தால் கூட முடியவே முடியாது!!!

18-05-2016

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், இப்படி ஒரு வரவேற்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கடந்த மாதம் வெளிவந்த ஜங்கிள் புக் திரைப்படம் இந்தியாவில் வெளிவந்த 40 நாட்களில் ரூ 250 கோடி வசூல் செய்துவிட்டது.இந்த வருடத்திலேயே இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் இது தான், பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என சொல்லப்படும் விஜய், அஜித் கூட இந்த சாதனையை நெருங்க பல வருடம் ஆகும் என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்.

இத்தனை வருடத்தில் முதன் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க்???

18-05-2016

இளையதளபதி விஜய் தன் ரசிகர்களுக்காக எத்தன ரிஸ்க் வேண்டும் என்றாலும் எடுப்பார். இந்நிலையில் அடுத்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து சம்மந்தப்பட்ட கதைக்களம் என நாம் முன்பே கூறியிருந்தோம்.விஜய் கிராமத்து கதைகளில் நடிப்பது இதுவே முதன் முறையாம், கடந்த சில வருடங்களாக நகர்ப்புற கதையில் மட்டும் நடித்து வந்த விஜய்க்கு இந்த படம் வேறு ஒரு தளமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இதில் விஜய் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

தல 57 எப்போது தொடங்குகிறது? ரிலீஸ் எப்போது? - தற்போதிய தகவல்!!!

17-05-2016

தல நடித்த வேதாளம் படம் நவம்பர் மாதம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து மறுபடியும் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம்.இந்த புதிய படத்துடைய பூஜை மே 1ம் தேதியே போடப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், பட காட்சிகள் அனைத்தும் ஈரோப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதோடு படம் அடுத்த வருடம் ஏப்ரல் 12ம் தேதி தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்த பட சம்பளம், ரூ.25 கோடி!!!

17-05-2016

வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வேகமாக வளர்ந்து வரும் சிவா நடிகர் தற்போது ரெமோ என்ற படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவரை, ஏ.எம்.ரத்னம் பெரிய தயாரிப்பாளர் சந்தித்து தனது அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டாராம். அதற்காக, சிவா நடிகர் பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.25 கோடியாம். மொத்த தொகையையும் ஒரே கட்டத்தில் கொடுக்க சம்மதித்து இருக்கிறார், தயாரிப்பாளர்! என்னமா எப்படி பண்றீங்களேம்மா???





Facebook | Twitter | Google+